முதலமைச்சரின் செயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் நியமனம்
Top Tamil News May 12, 2026 10:48 PM

முதலமைச்சரின் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தில் மூன்றாவது தனி செயலாளர்களை நியமித்து தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'முதலமைச்சரின் 3-வது தனிச் செயலாளர்' ஆக  ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அ. அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இதேபோல், வெ. விஷ்ணு ஐஏஎஸ் முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக மாற்றத்திற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் பிறப்பித்துள்ளார்.


ஏற்கனவே சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமி பிரியா முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.