கணவரை கொலை செய்து ஜேசிபி எந்திரத்தால் குழி தோண்டிப் புதைத்த நர்ஸ் மனைவி... கள்ளக்காதலால் கொடூரம்!
Dinamaalai May 26, 2026 12:48 AM

 தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா. இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில், கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகப் பணிபுரிந்தார்.  அங்கே அவருக்குச் சிண்டு என்பவருடன் எதிர்பாராத விதமாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தங்களது காதலுக்கு முத்தியம் ரெட்டி பெரும் தடையாக இருப்பதாக எண்ணிய கல்பனா, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

அதன்படி, நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த கல்பனா, சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் முத்தியம் ரெட்டியைத் தன் காதலன் சிண்டுவுடன் சேர்ந்து கொலை செய்து  அங்குள்ள ஒரு மைதானத்தில் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் பெரிய குழி தோண்டி அவரது உடலை ரகசியமாகப் புதைத்து விட்டனர். அதன் பிறகு, தனக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடிய கல்பனா, தனது கணவரைக் காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் நேராகச் சென்று புகாரும் அளித்தார்.

கணவரைக் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்திய போது கல்பனாவின் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை கல்பனா ஒப்புக்கொண்டார். அவர் அடையாளம் காட்டிய மைதானத்தில் இருந்து முத்தியம் ரெட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதோடு, இந்த கொடூரக் கொலை தொடர்பாகக் கல்பனா மற்றும் சிண்டு ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.