நடப்பு ஐபிஎல் போட்டியில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் 05-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. எஞ்சியுள்ள 03 போட்டிகளில் 02-இல் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இன்னும் சென்னை அணி, லக்னோ, ஹைதராபாத், குஜராத் அணிகளுடன் மோதவுள்ளது.
இந்த 2026 ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் ஹீரோ எம்.எஸ். தோனி விளையாடவில்லை. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கணுக்கால் காயத்தால் (Calf Injury) அவதிப்பட்டு வரும் தோனி, இந்த சீசனில் இதுவரை நடந்த வெளியூர் மேட்ச்சுகளில் இரண்டில் மட்டுமே அணியுடன் சென்றிருந்தார்.
ஆனால், இம்முறை, லக்னோ பயணத்திற்காக தோனிக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தீவிரமாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வழக்கமாக வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் செய்யாத தோனி, அதில் ஈடுபடுவது அவர் முழு உடல் தகுதியை எட்ட முயற்சிப்பதைக் காட்டுகிறது என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிஎஸ்கே அணி தற்போது தொடர்ந்து மூன்று வெற்றிகளுடன் நல்ல நிலையில் உள்ளதால், வெற்றி கூட்டணியை மாற்ற தோனி தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், புள்ளிப்பட்டியலில் 05-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே, எஞ்சியுள்ள 03 போட்டிகளில் 02-இல் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூழலில், அனுபவம் வாய்ந்த தோனியின் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.