தொகுப்பாளினி மணிமேகலை – ஹுசைன் வீட்டில் விசேஷம்.. புகைப்படத்துடன் வெளியான விஷயம்!
TV9 Tamil News May 25, 2026 04:48 PM

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினியாகவும், யூடியூபராகவும் இருந்துவருபவர் மணிமேகலை (Manimegalai). இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் (Vijay TV Hostess), குக் வித் கோமாளி (Cook With Comali) நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சில பிரச்சனையின் காரணமாக விலகிவிட்டார். இதையடுத்து ஜீ தமிழ் மற்றும் பிற தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் மற்றும் படங்களில் விழாக்களில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றிவருகிறார். இவர் வெறும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் யூடியூபராகவும் இருக்கிறார். மணிமேகலை மற்றும் அவரின் கணவரும், நடன கலைஞருமான ஹுசைன் (Hussain) இருவருமே யூடியூப்பில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்களின் சேனலில் ஆரம்பத்திலிருந்து வாடகை வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் சொந்த வீடு கட்டவுள்ளதாகவும் கூறியிருந்தனர்.

அதுபோலவே சில மாதங்களுக்கு முன் சொந்தவீடு கட்டுவதற்கு இடம் வாங்கி, தங்களின் வேலைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டு கட்டிவிட்ட நிலையில், அதற்கான பத்திரிகை தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. விரைவில் தங்கள் வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்தவுள்ளதாகவும், அது தொடர்பான பத்திரிகை புகைப்படம் தற்போது இணையத்தில் பரவிவருகிறது. தனது விருந்தினர்களை அழைப்பதுபோலவும், தங்களின் யூடியூப் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: கருப்பு 2 திரைப்படம் வரும்.. ஆனால் – ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

மணிமேகலை – ஹுசைன் தம்பதியினரின் புது இல்லத்தின் புதுமனை புகுவிழா பத்திரிகை பற்றிய பதிவு:

View this post on Instagram

A post shared by NAVEENKUMAR M (@biggboss_naveen_)

இந்த பத்திரிகையில், ஹுசைன் மணிமேகலை இல்லம் என்றும், எந்தவித மத உணர்வும் இல்லாதது போன்று அமைந்துள்ளது. தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் தங்களின் உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து அழைக்கும் வீடியோவையும் ஹுசைன் மணிமேகலை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: டிஆர்பியில் போட்டிபோடும் விஜய் டிவி – சன் டிவி.. யார் ஃபர்ஸ்ட்-னு பாருங்க!

மணிமேகலை ஆரம்பத்திலிருந்து மக்களுக்கு நெருக்கமானவராக இருந்துவருகிறார். சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து, விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும், போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அந்த வகையில் எப்போதும் தனது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். மணிமேகலை மற்றும் ஹுஸை தம்பதி “ஹுசைன் மணிமேகலை” என்ற யூடியூப் சேனலை நடத்திவருகின்றனர்.

இந்த சேனலில் அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்க்கையின் அப்டேட்டை தொடர்ந்து மக்களுக்கு தெரிவித்துவருகிறாரக்ள். அந்த வகையில் இந்த தம்பதி வீடுகட்டி வருவதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த புது இல்லத்தின் ஹவுஸ்வார்மிங் விழாவை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.