மேகதாதுவில் அணை கட்ட பிளான்…. உடனே களம் இறங்குங்க CM விஜய்…. இந்திய கம்யூனிஸ்ட் விடுத்த அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil May 25, 2026 05:48 PM

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், தமிழகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அதிரடி கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவின் தன்னிச்சையான இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட, முதல்வர் விஜய் அலர்ட் ஆக வேண்டும் என கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, அணை கட்டுவதைத் தடுப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீவிர ஆலோசனைகளை முதல்வர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.