அதிமுக உட்கட்சி அரசியலில் திடீர் திருப்பமாக, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து வருகை தந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கரன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு அதிரடி திருப்பமாக, இதுவரை சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட பண்ருட்டி மோகன் எம்.எல்.ஏ, தற்போது எடப்பாடி தரப்பின் முக்கிய புள்ளியான கே.பி.முனுசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சி.வி.சண்முகம் தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பக்கம் தாவத் தொடங்கியுள்ளதால், அதிமுக-வுக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குகிறதா என்ற விவாதம் தற்போதைய அரசியல் களத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது!