IPL 2026: சாம்பியன் பட்டத்திற்கு 4 அணிகள்.. பிளேஆஃப் போட்டிகள் எப்போது, எங்கே நடைபெறும்?
TV9 Tamil News May 25, 2026 06:48 PM

70 லீக் போட்டிகளுக்குப் பிறகு, ஐபிஎல் 2026 (IPL 2026) பிளேஆஃப் சுற்றுக்கான 4 அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று அதாவது 2026 மே 25ம் தேதி மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை வீழ்த்தியதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற 4வது அணியாக நுழைந்தது. பிளேஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதவுள்ளன என்பதையும், போட்டிகள் எப்போது, ​​எங்கு நடைபெறும் என்பதை தெரிந்து கொள்வோம். ஐபிஎல் 2026 பிளேஆஃப் (Playoffs) சுற்றுப் போட்டிகள் நாளை அதாவது 2026 மே 26ம் தேதி தொடங்குகின்றன.

ALSO READ: IPL 2026: குவாலிஃபையர் 1ல் மழை எச்சரிக்கை.. மோதும் பெங்களூரு – குஜராத்.. யாருக்கு சாதகம்?

ஐபிஎல் 2026 சீசனில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி, 2026 மே 26ம் தேதியான நாளைதர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும். முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை வருகின்ற மே 27ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் எதிர்கொள்ளும். இந்த போட்டியானது புது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

2வது தகுதிச்சுற்று எப்போது..?

இரண்டாவது தகுதிச்சுற்று வருகின்ற 2026 மே 29ம் தேதி நடைபெறும். இதில், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதும். புது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்தான் இந்த இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியை நடத்தும். புள்ளி அட்டவணையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரண்டாமிடத்திலும் பிடித்ததால், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும். யார் சாம்பியன் என நிரூபிக்கும் இறுதிப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ALSO READ: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற 4 அணிகள்.. எந்த அணி யாருடன் மோதும்..?

ஐபிஎல் 2026 பிளேஆஃப் அட்டவணை
  • 2026 மே 26 (செவ்வாய்) – தகுதிச்சுற்று 1 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்
  • 2026 மே 27 (புதன்கிழமை) – எலிமினேட்டர் சுற்று போட்டி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • 2026 மே 29 (வெள்ளிக்கிழமை) – இரண்டாவது தகுதிச் சுற்று
  • 2026 மே 31 (ஞாயிற்றுக்கிழமை) – ஃபைனல்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.