“எஸ்.பி.வேலுமணிக்கு அந்தப் பதவி வேணும்” சபாநாயகர் கதவைத் தட்டிய முன்னாள் அமைச்சர்கள்…. தலைமை செயலகத்தில் பரபரப்பு….!!
SeithiSolai Tamil May 25, 2026 05:48 PM

அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வின் சட்டப்பேரவை கொறடாவாக எஸ்.பி.வேலுமணியை முறைப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று இத்தரப்பினர் ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விரைவுபடுத்தக் கோரியே இந்த அதிரடிச் சந்திப்பு அரங்கேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.