கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சி..! “சிரிப்பு மூடிலிருந்து சீரியஸான இளைஞர்கள்”… இப்ப டி-ஷர்ட் கூட ரெடி பண்ணியாச்சு போல.. விலை எவ்வளவு தெரியுமா..? செம டிரெண்டிங்…!!
SeithiSolai Tamil May 25, 2026 10:48 PM

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது எத்தனையோ வினோதமான விஷயங்கள் டிரெண்டாகி வரும் வேளையில், “காக்கிராச் ஜனதா கட்சி” என்ற புதிய டிரெண்ட் இணைய உலகையே அதிர வைத்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு வெறும் வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்களுடன் தொடங்கிய இந்த டிரெண்ட், தற்பொழுது சந்தையில் டி-ஷர்ட்டுகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பிற வணிகப் பொருட்களாக மாறும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இதற்குக் பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

இணையத்தில் சில கன்டென்ட் கிரியேட்டர்கள் (Content Creators), ‘எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் உயிர் பிழைக்கக்கூடிய சக்தி வாய்ந்த உயிரினம் கரப்பான் பூச்சி’ என்பதை மையமாக வைத்து, அரசியல் பாணியில் நையாண்டி வீடியோக்களை உருவாக்கினர். இது நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்ததைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ‘X’ தளங்களில் இப் பெயரில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் உருவாக்கப்பட்டு, சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்கள் முழுவதும் தற்பொழுது இந்த “கரப்பான் பூச்சி அரசியல்” மீம்ஸ்கள் தான் நெட்டிசன்களின் தற்போதைய பிரதான பொழுதுபோக்காக மாறியுள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது காக்ரோச் ஜனதா கட்சியை மையப்படுத்தி புதிய டி-ஷர்ட்கள் ஆன்லைன் விற்பனை தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 499-ல் இருந்து ஆரம்பிக்கும் நிலையில் ஆயிரத்துக்கும் குறைவான விலையிலையே பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. மேலும் இதனை கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் விருப்பப்பட்டு வாங்கி வருவதாக கூறப்படுகிறது

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.