சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு ஆட்டோ ரிக்ஷா, பயணிகளுக்கு சொகுசு வசதிகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்டோவிற்குள் ஏர் கண்டிஷனர், தொலைக்காட்சி, இணைய வசதி, குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என ஒரு நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
இதனைப் பார்க்கும் பயணிகள், பொதுப் போக்குவரத்து இவ்வளவு நவீனமாக இருக்குமா என்று வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த ஆட்டோ ஓட்டுநரின் கடின உழைப்பும், பயணிகளின் வசதிக்காக அவர் காட்டிய அக்கறையும் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.
“>
இந்நிலையில் ஒரு சிறிய ஆட்டோவிற்குள் இத்தனை வசதிகளைச் செய்துள்ள அந்த ஓட்டுநர், “இதில் கழிப்பறை வசதி மட்டும் தான் இல்லை” என்று கிண்டலாகக் கூறுவது வைரலாகி வருகிறது. இத்தகைய புதுமையான முயற்சியால், இந்த ஆட்டோ இப்போது பயணிகளிடையே மிகவும் பிரபலமாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.