விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
சேர்மசாமி May 26, 2026 08:44 PM

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம்

அதிமுக எம்.எல்.ஏ- க்கள் 3 பேர் நேற்று தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெக - வில் இணைந்த நிலையில் , இன்று இசக்கி சுப்பையாவும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்த பின்பு அமைச்சர்கள் செங்கோட்டையன் , புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் த வெக - வில் இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து , சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர் ;

இந்தியாவின் வரலாற்றில் , தமிழகத்தின் வரலாற்றில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்கின்ற ஒரு தலைவர் முதலமைச்சர் விஜய்.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர். அவருடைய செயல்பாடுகளை தெரிந்ததற்கு பிறகு எல்லோரும் இணைந்து இருக்கிறார்கள் இது மகிழ்ச்சியான ஒன்று. 

குதிரை பேரம் நடைபெறவில்லை

தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரைக்கும் குதிரை பேரம் எங்கும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியது யாரென்று நாடு தெரிந்திருக்கிறது. திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவேன் என்று தெரிவித்தது யார். அவரிடத்தில் பதில் கேட்டால் அது சரியாக இருக்கும். 

அடுத்தடுத்து எம்.எல்.ஏ - க்கள் ராஜினாமா செய்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு 

நானே ராஜினாமா செய்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஒரு மாதத்தில் ராஜினாமா செய்வது அவரவரின் விருப்பம். 

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது என்ற கேள்விக்கு 

புதிய ஆட்சி வந்திருக்கிறது. 6 மாதங்களுக்கு நாங்கள் எந்த கருத்தும் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்தனர். 

நாங்களும் பொறுத்திருந்து தான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் தர வேண்டும். குற்றங்கள் நடைபெறுகின்ற போது உடனுக்குடன் அதிரடியான நடவடிக்கைகளும் முதலமைச்சராக எடுத்திருக்கிறார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதற்கான நடவடிக்கை உரிய முறையில் எடுக்கப்படுகிறது. 

"டார்கெட் அதிமுக" என்ற அடிப்படையில் அதிமுகவில் உள்ளவர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்கிறீர்கள் என்ற விமர்சனம் உள்ளது என்ற கேள்விக்கு ; 

வயித்து வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அவர் (EPS) வயிற்று வலிக்காரராக உள்ளார்.

கட்சியில் சேர்ந்து இருப்பவர்கள் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களை சந்தித்தேன் நான் யாரையாவது சேர்த்து இருக்கிறேனா ? 25 பேர் வருகின்ற போது நான் வந்திருக்கிறேனா ?

எடப்பாடி பழனிச்சாமி என் மீது கோபத்தில் இருக்கிறார். நான் வெளியில் வந்த பிறகு அவர் சரிந்திருக்கிறார். அது தான் அவருக்கு வேதனை. 

அதிமுகவில் ஜனநாயகம் இல்லை எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பெரிதாக வைத்தால் தான் சிரிக்கிறார். அம்மாவும் , தலைவர் படமும் இல்லாமல் அவருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பாராட்டு விழா நடத்தும் போது அம்மாவின் புகைப்படமும் எம்.ஜி.ஆ ரின் படமும் இல்லாமல் என்னை பாராட்டினால் போதும் என நினைத்தார். 

கொள்கை ரீதியாகவும் லட்சிய ரீதியாகவும் இயக்கத்தை காக்கும் நபர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.