School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
க.சே.ரமணி பிரபா தேவி May 26, 2026 08:14 PM

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெற்றோர்கள், பள்ளிகளின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளிகள் திறப்பு மாற்றி தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த நிலையில், அறிவியல்பூர்வமான சில விஷயங்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக, கோடை காலம் அந்த ஒரு வாரம் இருக்குமா, வெப்ப அலை இருக்குமா அல்லது பருவமழை தொடங்கிவிடுமா என்பது குறித்த கோப்புகளை கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்து இருந்தார்.

அந்த தகவல்கள் வந்த உடன், முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் காண்பித்து ஆலோசிக்கப்படும், அதன் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.