“தமிழக அரசியலில் பரபரப்பு!”… நேரில் வந்து கடிதம் கொடுத்த இசக்கி சுப்பையா.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி..!!!
SeithiSolai Tamil May 26, 2026 07:48 PM

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதம் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர், இசக்கி சுப்பையா நேரில் வந்து அளித்த ராஜினாமா கடிதம் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதும், அதனை சபாநாயகர் உடனே ஏற்றுக் கொண்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.