அதிமுக கட்சியின் எம்எல்ஏக்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்றைய தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் உடனடியாக இணைந்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 21 நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளான மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது