IPL 2026: சாம்பியன் பட்டம் யாருக்கு..? பைனலில் இன்று மோதும் குஜராத் – பெங்களூரு!
TV9 Tamil News May 31, 2026 10:48 AM

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026-ன் இறுதிப் போட்டியில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியில், இரு அணிகளும் இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்கும். இவற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 முறையாகவும், குஜராத் டைட்டன்ஸ் அணி 3வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு விறுவிறுப்பான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தகுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.

ALSO READ: ஐபிஎல் 2026 பைனல் எப்போது..? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

AND IT COMES DOWN TO THE LAST TWO STANDING! ❤️💙#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/oINSqOjKhv

— IndianPremierLeague (@IPL) May 29, 2026


ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 போட்டிகளிலும், குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த முன்னிலையை அதிகரிக்கவும், குஜராத் அணி புள்ளிகளை சமன் செய்து பட்டத்தை வெல்லவும் முயற்சிக்கும். ஐபிஎல் 2026 தொடரில் இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ALSO READ: பைனலில் மழைக்கு வாய்ப்பு.. குஜராத் – பெங்களூரு மோதலில் யாருக்கு சாதகம்..?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் டார்.

குஜராத் டைட்டன்ஸ்:

சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.