நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! சவரனுக்கு ரூ.5,600 சர சரவென சரிந்தது- 2 நாளில் அதிரடி மாற்றம்
கு. அஜ்மல்கான் June 11, 2026 12:44 PM

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருமண நிகழ்வுகள், விஷேச காலங்களில் தங்க நகைகளை அணிய இந்திய மக்கள் விரும்புவார்கள். மேலும் தங்க நகைகள் இந்திய திருமணங்களில் முக்கிய இடமானது பிடித்து வருகிறது. எனவே திருமணம், பிறந்தாள், தீபாவளி உள்ளிட்ட விஷேசங்களுக்காக தங்க நகைகளை அதிகளவு வாங்கி வருகிறார்கள். அதிலும் தங்கம் விலை அதிகரித்தாலும் நகைக்கடையில் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் தங்கம் விலையானது கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு முக்கிய காரணமாக பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்ட நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு என்ற காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்வதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது. 

ஈரான்- அமெரிக்கா போர் பதற்றம்

இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதனால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால் கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தை வாங்க ஆள் இல்லாத காரணத்தால் தங்கம் விலையானது குறைந்து வருகிறது. தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன்- 7ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.
  • ஜூன் -8ஆம் தேதி   கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன்-10ஆம் தேதி கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.