Top 10 News Headlines: தவெகவில் இணையும் விஜயதரணி.. பெட்ரோல், டீசலுக்கு கட்டுப்பாடு.. 11 மணி செய்திகள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் June 13, 2026 01:44 PM
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி - மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தவெக அலுவலகம் வருகை தந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வரகூர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்த தாய் - கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ரூ.2,500 பணத் தகராறில் பெண்ணை கொன்று 50 அடி பள்ளத்தில் வீசிய சம்பவத்தில் 18 நாட்களுக்குப் பின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமை செயலகத்திற்குள் செல்வோரை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும். சட்டமன்றம் வருவோர் உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,860க்கும் விற்பனையாகிறது.
வைகை அணையை தூர்வார அனுமதி கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மின்தடைக்கு சேதமடைந்த கேபிள்கள் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சாலை தோண்டும் பணிகளால் நிலத்தடி மின்கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 3 அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் நடைபெறுகிறது.
தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக எரிபொருள் விற்பனை செய்ய 90 நாள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில் முடங்கிய மெட்டா சேவைகளால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அவதி - இந்தியாவிலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
பைக் டாக்ஸிகளுக்கு சட்டப்படி உரிமம் வழங்க விதிகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க கேரள அரசு அனுமதியளித்துள்ளது. கடும்நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகத்தை மீட்கவே இந்த நடவடிக்கை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிபி ஜான் தெரிவித்துள்ளார்.