மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள சிங்கீதம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் சினிமாவை விட்டு தான் விலக முடிவெடுத்ததாகவும் இந்த படம் தன்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் , டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் , பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ச்சியாக படங்கள் நடித்தாலும் நிவேதா பெத்துராஜ் ப்ளாக்பஸ்டர் வெற்றியை சுவைக்கவேயில்லை. அதே நேரம் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவின. நிவேதா பெத்துராஜ் துபாயில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். கடந்த 3 ஆண்டுகளில் நிவேதா பெத்துராஜ் புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மூத்த இயக்குநர் சிங்கீத சீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கீதம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ் தான் சினிமாவை விட்டு விலக 3 ஆண்டுகள் முன்வே முடிவெடுத்திருப்பதாகவும் இந்த படம் தன்னை மீண்டும் சினிமாவிற்கு கூட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
சிங்கீதம் பட விழாவில் பேசிய நிவேதா பெத்துராஜ் ' கடந்த 2023 ஆம் ஆண்டு நான் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன். சில நேரங்களில் வாழ்க்கை உங்களை எல்லா விதமான தவறான முடிவுகளை எடுத்து தவறான பாதைகளில் கூட்டிச் சென்று கடைசியில் சிங்கீதம் சீனிவாச ராவின் படத்தில் கொண்டு வந்து சேர்க்கும். இப்படத்தின் தயாரிப்பாளர் நாக் அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னை மறுபடியும் வாழ்க்கைக்கு கூட்டி வந்தவர் அவர்தான். அவர் இல்லையென்றால் நான் இந்நேரம் இமயமலையில் தியானம் செய்துகொண்டிருப்பேன். நான் வேறு ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தேன். ஆனால் தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பிவந்துள்ளேன். " என தெரிவித்தார்
#NivethaPethuraj:
— Gulte (@GulteOfficial) June 14, 2026
“In 2023, I decided to quit cinema. But life took me on unexpected paths and brought me to Singeetham Srinivasa Rao garu’s golden blockbuster.”
I thank #NagAshwin for bringing me back. Otherwise, I would have been in the Himalayas. pic.twitter.com/WASJyUX62L