Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
பேச்சி ஆவுடையப்பன் June 16, 2026 02:14 PM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பிபின் மஞ்சு சிறையில் அடைப்பு - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாகியுள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு உயர்த்தியது
நீட் மோசடிகள் குறித்து புகாரளிக்க பிரத்தியேக இணையதளம் ஒன்றை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும், ஒரு கிராம் ரூ.14,060க்கும் விற்பனையாகிறது.
இந்திய ராணுவ வீரர்களுக்கான புதிய சீருடை விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மீசையின் நீளம், சீருடையில் வாசனை திரவியம், லிப்ஸ்டிக்கிற்கு தடை போன்ற விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 74,862 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இசை, நாடகம், நடனம் பாரம்பரிய கலைகளில் பங்களிப்பிற்கு வழங்கப்படும் விருது யுவ புரஸ்கார் விருது பிரபல நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அடுக்குமாடி கட்டிடங்களின் அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து ஜூன் 18ம் தேதி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம் அறிவித்துள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2,949 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர சிறப்பு வாகன சோதனையில் 350 காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு தடை விதித்திருப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. http://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் எனதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.