#BREAKING : நீட் தேர்வு மோசடி குறித்து புகாரளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு..!
Top Tamil News June 16, 2026 01:48 PM

கடந்த மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந் நிலையில் மே மாதம் நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை திருப்பி தரும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. 

இந்நிலையில், நீட் தேர்வு மோசடிகள் குறித்து புகாரளிக்க புதிய இணையளத்தை அறிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை...

http://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம் மற்றும் http://nta.ac.in, http://neet.nta.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தகவல்களை பகிரலாம் என அறிவிப்பு..

நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை திருப்பி தரும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதுகுறித்து முக்கிய அறிவிப்பையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் திரும்ப பெறும்போது தேர்வர்களிடம் எக்காரணம் கொண்டும் ஓடிபி கேட்கப்படாது.

செலுத்திய பணம் உங்களின் வங்கிக்கணக்கில் வந்து சேரும். மோசடியான அழைப்புகள், செய்திகள், இணைப்புகளை தேர்வர்கள் நம்ப வேண்டாம். பணத்தை திரும்ப பெற தேர்வர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. கட்டணத்தை திரும்ப பெறும் போது, வங்கிக் கணக்கு எண்ணை தவறுதலாக பதிவிட்ட தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த வாய்ப்பானது, தேர்வு முடிந்த பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.