“என் மகன் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார்” உங்க அப்பா பேட்டி கொடுத்தது ஞாபகம் இருக்கா….? முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் எழுப்பிய கேள்வி….!!
SeithiSolai Tamil June 24, 2026 09:48 AM

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார்.

விஜய் சொன்ன இந்த குட்டிக்கதை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் காரசாரமான சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

​விஜய்யின் கதைக்கு வழுக்கையான பதிலடி கொடுத்த சிவசங்கர், “என் மகன் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று உங்களுடைய சொந்த அப்பா சந்திரசேகர் அவர்களே வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருக்கிறார்; அதுமட்டுமில்லாமல், கணவனைக் காணவில்லை என்று ஒரு பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்” என்று விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களையும், தவெக கட்சியின் உள்விவகாரங்களையும் மேடையில் போட்டு உடைத்தார்.

தன் அப்பாவைப் பற்றி குட்டிக்கதை சொன்ன முதல்வருக்கு, அவருடைய அப்பாவின் பழைய பேட்டியை வைத்தே முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் இப்படிப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய வீடியோ, தற்போது எக்ஸ் (X) தளத்தில் நெட்டிசன்களால் பயங்கரமாக வைரலாக்கப்பட்டு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.