தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதான எதிர்கட்சியான திமுக சார்பாக பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் போராட்டம், மின் வெட்டு, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய்,
டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து கட்சி நிதி வசூலிக்கப்பட்டதாக திமுகவை விமர்சித்திருந்தார். மேலும் குட்டி கதை சொல்லுவதாக கூறி அப்பாவை காணவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை கிண்டல் செய்தார். மேலும் படத்தில் வருவது போல் ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா என சபாநாயகரிடம் அனுமதி பெற்று ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் செய்கை செய்திருந்தார். இதற்கு திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
மேலும் தமிழக சட்டமன்றத்தை முதலமைச்சர் விஜய் சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் விஜய்க்கு வகுப்பெடுப்பது போல வெளியிட்டுள்ள பதிவில், சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!? நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!! ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க.... Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!! என பதிவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் ஜெயக்குமார் வகுப்பெடுத்துள்ளார். அதில்,
1. சட்டமன்றம் ஒரு பொது மேடை மக்களுக்காக பேசவதே உங்கள் கடமை.
2. எதிர்க்கட்சிகளை மதியுங்கள் -வேறுபாடு கருத்தில் இருக்கலாம், விரோதத்தில் அல்ல
3. பேச்சில் கட்டுப்பாடு காக்கவும் உணர்ச்சியை அல்ல, உண்மையை பேசங்கள்..
4. தரவுகளுடன் பேசங்கள் உண்மை, ஆதாரம், திட்டம் அவசியம்.
5. ஒரே நேரத்தில் ஒரே விஷயம் தெரிவான பேச்சு, தெளிவான செய்தி.
6. தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்கவும் கருத்தை விமர்சியுங்கள், நபறை அல்ல.
7. மக்களின் நம்பிக்கையை வெல்லுங்கள் செயலால் நிருபபியுங்கள், சொல்லால் அல்ல. -
8. இறுதியில் தீர்க்கமான, நேர்மறையான செய்தியுடன் முடிக்கவும்.