தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகப் பிரபல சமூக ஆர்வலர் ஜூலி அவர்கள் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவு, தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
“இங்கு 41 நாள் ஆட்சி நடக்குதா, இல்லை இது உத்தர பிரதேச மாநிலமா என்றே தெரியவில்லை; பக்ரீத் பண்டிகைக்கு மாடு வெட்டக் கூடாது, ஒரு இஸ்லாமிய இளைஞரை எஃப்.ஐ.ஆர் போடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்கள்” எனத் தவெக அரசின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளை ஜூலி மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த 41 நாள் தவெக ஆட்சியில் ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன; 3 வயதுக் குழந்தைக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என்று அடுக்கடுக்கான அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.
“இதே போன அரசாங்கமாக இருந்திருந்தால் ட்விட்டரில் உடனே ட்வீட் போட்டுப் பொங்கும் அன்றைய கூட்டணிக் கட்சிக்காரர்கள், இப்பொழுது ஏன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருக்கிறார்கள்? நாளைக்கு எங்கள் பிள்ளைகளுக்கும் இந்த நிலைமை வருமோ என்று பயமாக இருக்கிறது” என ஜூலி எழுப்பியுள்ள இந்த நியாயமான எமோஷனல் கேள்விகள் தற்போது இணையத்தில் பயங்கரமாகத் ட்ரெண்டாகி, தவெக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.