”கார் பார்க்கிங் இல்ல…. அது பார் கார்க்கிங்” பதற்றத்தில் சட்டசபையிலேயே வாய் உளறிய சேகர்பாபு…. வச்சு செய்யும் நெட்டிசன்கள்….!!
SeithiSolai Tamil June 24, 2026 09:48 AM

தமிழக சட்டசபையில் குன்னூரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் குறித்து, தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே காரசாரமான விவாதம் வெடித்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் கார் பார்க்கிங் தேவையா என்று அமைச்சர் ரமேஷ் அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சேகர்பாபு, நகராட்சிப் பரிந்துரை மூலம் கார் பார்க்கிங்கில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும் என்றும், அதை வைத்து கோவிலை மேம்படுத்தலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

​ஆனால், அமைச்சர் ரமேஷின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வாய் தடுமாறி, “கார் பார்க்கிங்” என்பதற்குப் பதிலாக “பார் கார்க்கிங்” என்று லைவிலேயே உளறினார். இந்தத் தவறைத் துல்லியமாகக் கவனித்த நெட்டிசன்கள், சேகர்பாபு பயத்தில் உளறுகிறார் என்ற ரீதியில் அந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.