பணியாளரை அடைத்து வைத்தாரா? நகைகள் திருடப்பட்டதாக ரவி மோகன் புகார் – என்ன நடந்தது?
TV9 Tamil News June 24, 2026 02:48 PM

சென்னை, ஜூன் 24 : நடிகர் ரவிமோகன் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40,000 பணத்தை ஊழியர்கள் திருடிவிட்தாக அவரது மேலாளர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சரம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் வீட்டில் வேலை பார்த்த தனது மனைவியை அடைத்து வைத்து மிரட்டுவதாக அவரது கணவர் புகார் அளித்திருந்த நிலையில், பணிப்பெண்ணை காவல்துறையினர் ஜூன் 23, 2026 நேற்று மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நகைகள் திருடப்பட்டதாக நடிகர் ரவி மோகன் புகார்

சென்னை நீலாங்​கரை​யில் நடிகர் ரவி மோகன் வீடு உள்​ளது. அங்கு அவரது வீட்டில் பணியாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நகை திருட்டு தொடர்​பாக, நடிகர் ரவி மோகன் வீட்​டில் ஜூன் 23, 2026 பணிப்​பெண்​கள் சிறை வைக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்பாக அந்த பணிப்பெண்ணின் மகன் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : Suriya: அட அட அப்போ தீபாவளிதான்.. சூர்யா47 படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!

சென்னை காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு ஜூன் 23, 2026 ஒரு​வர் தொடர்பு கொண்​டு, நடிகர் ரவி மோகன் வீட்​டுக்கு வேலைக்​குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்​ப​வில்லை என்​றும், அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என்​றும் புகார் அளித்​த​தாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீலாங்​கரை காவல்துறையினர் உடனடி​யாக நடிகர் ரவி மோகனின் வீட்டுக்கு நேரில் சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். அப்​போது வீட்​டுக்​குள் 2 பணிப்​பெண்​கள் மற்​றும் அவர்​களு​டன் வந்​திருந்த சிறு​வன் ஒரு​வன் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுதொடர்பாக நடிகர் ரவி மோக​னிடம் காவல்துறையினர் விசா​ரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு பதிலளித்த ரவி மோகன், வீட்​டில் பணி​யாற்றி வந்த பெண்​கள் நகை திருடிய​தாக சந்​தேகம் ஏற்​பட்​ட​தாகவும், அதன் காரணமாக அவர்​களிடம் விசா​ரித்து வந்​த​தாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம், சந்தேகம் இருந்தால் தங்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் இப்படி வீட்டில் வைத்து தாங்களாகவே விசாரணை நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Trisha: எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நடிகை திரிஷா!

மேலும் நகை திருட்டு தொடர்​பாக உரிய புகார் அளித்​தால் சட்​டப்​படி விசா​ரணை நடத்​தப்​படும் என ரவி மோகனிடம் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து வீட்​டிலிருந்த பணிப்​பெண்​கள், அவர்​களு​டன் இருந்த சிறு​வனை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஜூன் 24, 2026 இன்று காலை நீலாங்கரை காவல்நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40, 000 பணத்தை பணியாளர்கள் திருடிவிட்டதாக புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.