அன்னதானத்திற்கு வந்த மனநலம் பாதித்த நபர்… காலால் உதைத்து சாலையோரம் வீசிய பூசாரி… வைரலான வீடியோவால் சர்ச்சை வெடிப்பு..!!!
SeithiSolai Tamil June 24, 2026 09:48 PM

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு பண்டாரா நிகழ்வில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு உணவு பெற வந்த மனநல பாதிப்பு கொண்ட நபரை, கோவிலின் பூசாரி ஒருவர் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நபர் தூரமாக விழுந்த நிலையில், பின்னரும் அவரை சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்று சாலையோரத்தில் தூக்கி வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“>

இது குறித்து வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் பூசாரியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உணவு வழங்கும் புண்ணிய நிகழ்வில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதோடு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.