“இந்தச் சூழ்நிலையில தவெக-வுக்கு ஏன் வாக்களித்தோம்னு மக்கள் வருத்தப்படுறாங்க.!” – மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா பரபரப்பு பேச்சு..!!
SeithiSolai Tamil June 24, 2026 09:48 PM

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகச் சுமார் 3 மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்ற முதல் மாமன்றக் கூட்டத்தில், நகரின் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக-வுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டுகள் மற்றும் சென்னை மாநகரப் பள்ளி நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், மாமன்றத்தில் பேசிய மேயர் பிரியா, சென்னை நகரின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “தற்போதைய சூழ்நிலையில் தவெக-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர்; திமுக-வின் இந்தத் தோல்வி என்பது வெறும் தற்காலிகமானதுதான்” என்று அவர்  தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.