தமிழ்சமுதாயத்தில் உள்ள ஆட்கள் விஜய் கண்ணில் படவில்லையா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
அருண் சின்னதுரை June 27, 2026 03:44 PM

நட்பு வட்டாரத்தில் உள்ள மேடம் திரிஷா அவர்களை துணை முதலமைச்சராக அறிவிப்பாரோ என்ற நிலை தான் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை ஆனையூர் பகுதியில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோயில் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு, தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இயக்குனர், நடிகர் பாக்கியராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
 
தமிழ்சமுதாயத்தில் உள்ள ஆட்கள் கண்ணில் படவில்லையா? 
 
தமிழ்நாட்டை சாராத நபரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார். 
ரதன்பண்டீட்க்கு அரசு பதிவுக்கு எதிர்ப்பு வந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. ஜெகதீஸ், ஜான். ஆரோங்கியசாமி, முதலமைச்சரின் உதவியாளராக நியமித்துள்ளார். இவர்களை நட்புக்கு இலக்கணமாக நியமித்துள்ளார். ஆனால் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தமிழ்சமுதாயத்தில் உள்ள ஆட்கள் கண்ணில் படவில்லையா? வெங்கட் நாரயணா சுதந்திர போராட்ட தியாக சமூக போராளியா?
ஆயுள் முழுக்க அவரே முதலமைச்சர் எனவும், அப்பா வீட்டு சொத்து போல நினைத்து அரசு பதவிகளை தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு வாரி வாரி வழங்குகிறார்.
 
சிங்கப்பெண் படைக்கு ஆளும் இல்லை அதிகாரமும் இல்லை
 
அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள மேடம் திரிஷா அவர்களை துணை முதலமைச்சராக அறிவிப்பாரோ என்ற நிலை தான் உள்ளது. ஜனநாயகத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, கருணாநிதி நாடாக மாற்றினர். கலைஞர் என்று சொல்லி தமிழ்நாடு கலங்கி நின்று வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டனர். தமிழ்நாட்டை அப்பா வீட்டு சீர் என நினைத்து ஜனநாயகம் என்ற பெயரில் ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசு பதவி கொடுத்துள்ளார். தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து தெருவில் நிற்கிறார்கள். சிங்கப்பெண் படைக்கு ஆளும் இல்லை அதிகாரமும் இல்லை, ரீல்ஸ் எடுக்க மட்டும் தான் சிங்கப்பெண் படைக்கு அதிகாரம் உள்ளது. மேகதாது, நீட், தவெக நிர்வாகிகள் சட்டத்தை தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு என பல்வேறு பிரச்னைகள் உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல சனிக்கிழமை ஆனால் ஆள்பிடிக்கும் படலத்திற்கு எப்போது என்ட் கார்டு போடுவார்.
 
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பாரா?
 
அதிகாரம் ஆசைகாட்டி சின்ன குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல அனைத்து கட்சியிலும் ஆள்பிடிக்கும் அட்ராசிட்டியில் ஈடுபடுவதை எப்போது என்ட் கார்டு போடுவார். START RUN என்பது தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்தை விட்டு எப்போது ஓடுவார்கள் என்பது போல உள்ளது ஆட்சி. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் விவசாயாக பிறக்க வேண்டும் என கூறிய முதலமைச்சர் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பாரா?
 
ரீல்ஸ்க்கு மட்டும் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
 
அம்மா உணவக திட்டம் போல குடிமராமத்து திட்டம், இலவச லேப்டாப் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவாரா? திமுக அரசின் தோல்விக்கு சட்ட ஒழங்கு தான் அதேபோன்று தான் தவெக ஆட்சியும் ரியல் சட்ட ஒழுங்கை மறைத்து ரீல்ஸ் வெளியிட்டு ஆட்சி நடத்துகின்றனர். அலைபேசி அலையால் இந்த தேர்தலில் ஆட்சி அமைந்துள்ளது. பிறந்த நாள் விழாவை தோழியோடு கொண்டாடுவது அவரது உரிமை தொண்டர்களோடு கொண்டாடமல் தோழியோடு கொண்டாடுகிறார்.தோழி திரிஷா அவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சரோ எது சிறந்ததோ அதனை கொடுப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏவ வேலு இடங்களில் ரெய்டு ஆட்சி மாற்றம் ஏற்பாட்டால் நடப்பது. நீதிமன்றத்தில் தெரியும். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் Statics Team என்ன செய்ய சொன்னார்களௌ அதையே காப்பி பேஸ்ட் செய்துவருகின்றனர். வசீகரமான முதலமைச்சர் என்பதால் எதை செய்தாலும் ரசிப்பார்கள் போல தவெகவில் அவரவர் அப்பாவை கண்டுபிடிங்க என சொல்ல வேண்டும் போல. அலைபேசி அலையால் ஆட்சிக்கு வந்ததால் மக்களுக்கு முக்கியத்துவம் என்பதை தாண்டி ரீல்ஸ்க்கு மட்டும் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.