இளம் பெண்ணை காருக்குள் வைத்து கத்தியால் குத்த முயன்ற நபர்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்.. பெங்களூரில் பரபரப்பு!
TV9 Tamil News June 28, 2026 03:48 AM

பெங்களூரு, ஜூன் 27 : கர்நாடகாவில் (Karnataka) காருக்குள் வைத்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர் கார் வெடித்ததில் பரிதாபமாக பலியாகியுள்ளார். காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் இளம் பெண் காரில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்த நிலையில், காருக்குள் இருந்த அந்த நபர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காருக்குள் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபர்

கர்நாடகாவில் உள்ள துமகூரு மாவட்டத்தில் நாகேந்திரா என்ற 30 வயது நபர், ரம்யா உல்லாஸ் என்ற 23 வயது இளம் பென்ணை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். இந்த நிலையில், துமகூரு பகுதி அருகே கார் வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை குத்தியுள்ளார். அப்போது ரம்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 ஆண்டுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிப்போம்… அமித் ஷா உறுதி!

காரில் திடீரென வெடித்த வெடிகுண்டு

இந்த நிலையில் தான், காரில் வெடிகுண்டி இருப்பதாக கூறிவிட்டு காரில் இருந்து ரம்யா கீழே இறங்கியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். ரம்யா கூறியவாரே காருக்குள் நாட்டு வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், நாகேந்திரா காருக்குள்ளே இருந்துள்ளார். அப்போது காரில் இருந்த வெடிகுண்டு வெடித்து கார் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ1.23 கோடியை இழந்த வங்கி அதிகாரி.. ஷாக் சம்பவம்!

கார் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில், நாகேந்திரா உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து காருக்குள் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரம்யா மற்றும் அவரது காதலர் வாடகை காரில் அங்கோலா நகர் நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.