பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அங்குள்ள மேற்கத்திய கலாச்சார ஆடைகளை அணியவே விரும்புவார்கள். ஆனால், இன்ஸ்டாகிராமில் ஒரு இந்தியப் பெண் ஜப்பானின் தெருக்களில் பாரம்பரியமிக்க சிவப்பு நிறப் புடவை அணிந்து வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் ஜப்பானிய தெருக்களில் முழு நளினத்துடனும், தன்னம்பிக்கையுடனும் நடந்து செல்கிறார். அவரது இந்தத் தூய தேசி தோற்றத்தைக் கண்டு வியந்த அங்கிருந்த ஜப்பானிய மக்கள், அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், பலரும் அவரைப் பார்த்துப் புன்னகைத்து, அவரது அழகைப் பாராட்டி அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
“>
இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அந்தப் பெண், ஜப்பானில் புடவை அணிந்து சுற்றியது தனக்கு ஒரு அழகான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதனால் “வெளிநாடுகளுக்குச் சென்றாலும் நம் நாட்டுப் பாரம்பரியத்தை மறக்காமல் பெருமைப்படுத்திய விதம் அற்புதம்” என்றும், “உலகில் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை” என்றும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.