அதிர்ச்சி வீடியோ... உயரத்திலிருந்து ஆழமில்லாத நீச்சல் குளத்திற்குள் டைவ் அடித்த இளைஞர் தலையில் அடிபட்டுப் மரணம்!
Dinamaalai June 28, 2026 04:48 PM

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மால்வன் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், தனது நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகச் சென்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரின் ஆழம் தெரியாமல், உயரத்தில் இருந்து நீச்சல் குளத்திற்குள்  குதித்த போது, தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஸ்ரேனிக் தகாலே என்பவர் தனது நண்பர்களுடன் மால்வன் பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளார். மால்வன் தாலுக்காவில் உள்ள வைரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். நேற்று மாலை ரிசார்ட் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by PUNE PULSE (@punepulse)