“வெள்ளை அறிக்கை விடுவதில் ஸ்பெஷலிஸ்ட் நீங்கதானே?” விஜய் அரசுக்கு ஓ.எஸ்.மணியன் விடுத்த சவால்…. சி.விஜயபாஸ்கர் விவகாரத்தில் பரபரப்பு….!!
SeithiSolai Tamil July 04, 2026 09:48 AM

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகினார். அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தவெக தலைமைக்கு அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அதிரடி சவால் விடுத்துள்ளார். இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ்.மணியன் காரசாரமாகப் பேசினார். தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் தவெக அரசு ஆர்வம் காட்டியது.

அதேபோல் தங்களது கட்சியில் இணைந்துள்ள சி.விஜயபாஸ்கரின் ஊழல் விவரங்களையும் வெளியிட வேண்டும். அவரது சொத்து விவரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையையும் வெளியிட தவெக தயாரா? இப்படி ஓ.எஸ்.மணியன் ஓபனாகச் சவால் விடுத்துள்ளார். 8​மேலும் அவர் தொடர்ந்து பேசியபோது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உயரம் குறைவுதான். ஆனால் அவர் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவர் மீது குட்கா வழக்கு உள்ளது.

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. இத்தனை காலம் முகவரியைக் கொடுத்த இயக்கத்திற்கு விஜயபாஸ்கர் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். இவ்வாறு ஓ.எஸ்.மணியன் தனது ஆழமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த அதிரடிப் பேச்சு இணையத்தை உலுக்கி வருகிறது. தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தவெக – அதிமுக தொண்டர்களிடையே அனல் பறக்கும் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.