கட்டா குஸ்தி 2 படத்தை இயக்கியவர் செல்லா அய்யாவு. இந்தப் படம் ரிலீஸாகுறதக்கு 2 மாசத்துக்கு முன்னால மலையாளத்துல ஜெயஜெயஜெயஹேன்னு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. அதுவும் இதுவும் ஒரே மாதிரியான கதைதான். அந்தப் படம் ஒரு பெரிய ஹிட். தமிழ்ல கிடைச்ச வரைக்கும் லாபம்னுதானே நாம இருப்போம். கட்டாகுஸ்தி 1ம் ஓகேங்கற மாதிரி நல்லாவே ஓடிப்போச்சு. அந்த ஹிட் எடுத்து பொழைச்சிப் போறதுதான் ஒரு புத்திசாலித்தனமான வேலைங்கறது இங்கே இருக்குற கணக்கு.
அப்படி இந்தக் கதைக்குத் தொடர்புள்ள மாதிரி ஒரு கதையை எழுதி அப்படி கல்லா கட்டிட்டுப் போறதுதான் புத்திசாலித்தனம்னு பண்ணி நம்ம சாவடிக்கப்போறாங்கன்னு படத்தைப் போய் பார்த்தா ஓரளவுக்கு 2 பார்ட்டுக்கும் தொடர்பு உள்ள மாதிரி நல்ல முறையான கதையை எழுதி வச்சிருந்தாங்க. பார்ட் 1ல ஹீரோ பெரிய மல்யுத்த வீரர். சொல்லாமலே ஹீரோவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.
அது ஒரு கட்டத்துல தெரிய வரும்போது அதுவே பெரிய பிரச்சனையா மாறி 2 பேரும் பிரியற மாதிரி வந்து அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்துடுவாங்க. பார்ட் 2ல அவங்களுக்கு ஸ்கூலுக்குப் போற வயசுல ஒரு குழந்தை இருக்கு. ஹீரோயின் ஸ்போர்ட்ஸ் கோட்டால ரெயில்வேல வேலை பார்க்குறாங்க. அதனால குழந்தையைப் பார்க்க ஹீரோ வீட்டுல உட்கார்ந்து கவனிக்கிறாரு. அதனால வெளியில கிண்டல் பண்றாங்க. அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம தன்னோட வேலையைப் பார்க்குறாரு.
ஒரு கட்டத்துல கணவனுக்கும், மனைவிக்கும் சூழ்நிலை காரணமா பிரச்சனை வருது. இப்போ ரெண்டு பேரும் பிரியற சூழல் வருது. அப்புறம் என்னாச்சுங்கறது தான் கதை. இது ஸ்போர்ட்ஸ் டிராமா. கொஞ்சம் ஃபேமிலி, கொஞ்சம் காமெடி கலந்து பண்ணிருக்காங்க. இந்தக் கதையில ஓரளவு கதை இருந்தது. அதுக்கான திரைக்கதையும் இருந்தது. படத்துல ரொம்ப நல்ல சீனும் இருந்தது. ஆனா அதை ரொம்ப நல்லா எடுக்கல. ஸ்கூல்ல ஹீரோ ரவுடிகளை அடிக்கிற இடத்துல இன்னும் நல்லா ஸ்கோர் பண்ணிருக்கலாம். நிறைய நல்ல சீன் இருந்தது.
கடைசில நல்லா முடிச்சிருந்தாங்க. கட்டா குஸ்தி1 யூகிக்க முடியாது. பார்ட் 2ல சரியா யூகிச்சிட முடியும். ஆனா 1ஐ விட இதுல நிறைய எமோஷனல் சீன் வச்சிருக்காங்க. அது ஒர்க் ஆகிருக்கு. லாஜிக் பார்க்காம மூளையைக் கழட்டி வச்சிட்டு வீக் எண்ட்ல ஃபேமிலியோட இந்தப் படத்துக்குப் போகலாம். பெண்கள், குழந்தைகள்லாம் ரசிப்பாங்க. ஆம்பளைகளுக்குப் பெரிசா சேதாரம் இருக்காது. பெரிசா போரடிக்காது. அங்கங்கே காமெடி இருக்கும். நிச்சயமா மோசம் இல்லாத படம் என்கிறார் புளூசட்டை மாறன்.