பெரிய ராஜாக்கள் கூட்டத்தில்… பாக்கியராஜ் பற்றி கமல் சொன்ன விஷயம்!
Tamil Minutes July 04, 2026 09:48 AM

பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும்இ எதிர்ப்புக்கும் இடையில் யாரும் எதிர்பாராத வகையில் மாஸாக இயக்கி இருந்தார் பாரதிராஜா. இந்தப் படத்தில் தான் கமலும்இ ரஜினியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தனர். அழகு கமலை கோவணாண்டியாக மாற்றி இருந்தார் பாரதிராஜா.

சப்பாணி என்ற கேரக்டரில் வெத்தலைக் குதப்பிய வாயுடன் பேசுவதுமாக கமல் ரசிகர்களைத் தன் நடிப்பின் ஆளுமையால் கட்டிப் போட்டு இருந்தார். ஸ்டைல் ரஜினியைப் பரட்டையாக்கி இருந்தார். அழகு மயிலாக ஸ்ரீதேவி. அப்புறம் கவுண்டமணியின் கலகல காமெடி.

காந்திமதியின் அசத்தலான கிராமிய பாஷையுடன் கூடிய நடிப்பு என மிரட்டி இருந்தார் பாரதிராஜா. எல்லாவற்றுக்கும் மேலாக படத்திற்கு வசனம் எழுதியவர் திரைக்கதை மன்னன் பாக்கியராஜ். இவர் பாரதிராஜாவின் உதவியாளராக சேர்ந்த உடன் பணியாற்றிய முதல் படம் இதுதான். பாக்கியராஜ் குறித்து கமல் என்ன சொல்றாருன்னு பாருங்க.

பாக்கியராஜ் திரையுலகிற்குள் நுழைந்து 50 ஆண்டுகளைத் தொட்டபோது பெரிய விழா எடுத்தது தமிழ்த்திரை உலகம். அந்த விழாவில் பல கலைஞர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் தான் கமல். என்ன சொன்னாருன்னு பாருங்க. நாங்கள் தமிழ்த்திரை உலகில் வந்த புது அலையில் கரை ஒதுங்கிய கலைஞர்கள்.

பாக்கியராஜ் வாத்தியார் ஆகுற வரைக்கும் பாரதிராஜா. பெரிய ராஜாக்கள் கூட்டத்தில் வந்து சேர்ந்தேன். இதுல யார் ராஜா, யார் மந்திரின்னு எல்லாம் அப்போ தெரியாது. உங்க பேரு என்னன்னு அப்போ கேட்டு பழகிய பழக்கம் இந்த மேடை வரை சேர்த்தது.

அதுக்கு காரணம் நட்பு மட்டும் அல்ல. அவரது தனித்திறமையும் கூட. 16 வயதினிலே செட்ல சிதறிக்கிடக்கும் திறமைகள். எங்களுக்குத் தெரியல. ஆடியன்ஸ் தான் கண்டுபிடிச்சி சொன்னாங்க. நீங்கல்லாம் முக்கியமானவர்கள்.

இந்த மாதிரி சிறந்த கலைஞர்களைக் கொண்டாடும் போது நாம் கலையையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம் என்று கலைஞனின் மனதுக்கு கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும் என்றார் கமல்.

Sankar Velu

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

Author: Sankar Velu

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.