தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து விஷ்ணு விஷால் நடித்து 2022ம் வருடம் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
எனவே, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கணவன் - மனைவி இடையேயான உறவு, உறவுக்கான முக்கியத்துவம், அப்பா - மகள் செண்டிமெண்ட், காமெடி, விளையாட்டு என எல்லாவற்றையும் மிக்ஸ் செய்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்..
நேற்று வெளியான இந்த திரைப்படம் முதல்நாளில் 2.55 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் விஜய் பற்றி பேசியது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். ஆனாலும் படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக சனி ஞாயிறு என வர இரண்டு நாட்கள் வருவதால் கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.