அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
கு. அஜ்மல்கான் July 04, 2026 03:14 PM

விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டு நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் இந்த அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று தமிழக ஆளுநர்ரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். அதில், தமிழ்நாடு மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், ஒரு பெண் குழந்தை இடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து  முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் இல்லாத இரண்டு பேர் பங்கேற்றது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள்

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி, அரவிந்த் மேனன் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.

யார் அந்த 2 பேர்.?

மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அந்த யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சருடன் அவரது நண்பர்களான ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்னு ரெட்டி உடன் உள்ளனர். தற்போது வரை அவர்களுக்கு எந்த வித அரசு பொறுப்பும் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனவே அப்படி இருக்கும் பட்சத்தில் அமைச்சரவை கூட்டத்தில்  ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்னு ரெட்டி பங்கேற்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.