Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
சுகுமாறன் July 13, 2026 12:14 AM

இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய ரன் படம் குறித்து இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, 

ரன்னில் காமெடி வந்தது எப்படி?

இந்த படம் ஸ்லீக்கா, ஸ்டைலா, அப்படினு நினைச்சு பண்ணது. ரஜன் சாருக்கு போய் கதை சொன்னது உடனே, கதை ரொம்ப நல்லா இருக்குது. கொஞ்சம் ரிலீப்புக்கு கொஞ்சம் காமெடி சீன் வச்சு யோசிங்கனு சொன்னாரு. அப்போ, கம்பெனியில 3, 4 படம் விவேக் சாரை கமிட் பண்ணப்போறாங்க. அதோட சேத்துப் பேசிடலாம்னு நினைச்சாங்க.

எனக்கு என்னடா இது? நாம ஒன்னு நினைச்சோம். இவரு வேற கேக்குறாரு. போன படத்துலயும் அதே பிரச்சினை எனக்கு. காமெடி சீன் ஏதாவது சூட் பண்ணுயானு சொல்லிட்டே இருப்பாரு. தனியா ஒரு காமெடி ட்ராக் வரது எனக்கு பிடிக்காது. கதையோட இருக்கனும்னு நினைப்பேன்.

கோபித்துக் கொண்ட விவேக்:

அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் சொல்லிட்டாரு. இரண்டே நாள்ல எனக்கு அந்த ட்ராக் கிடைச்சுடுச்சு. விவேக் சார்கிட்ட சொன்னேன். அவர் ஒரு டீம் வச்சு அப்படி ஒர்க் பண்ணிதான் உள்ளே வந்துச்சு. அந்த ஸ்பாட்லயே வந்து நிறைய டெவலப் ஆகும். நாங்க ரெண்டு பேரும் பேசி பேசி நிறைய வளர்ப்போம்.

விவேக் சாரைப் பொறுத்தவரை எடுத்ததெல்லாம் வைக்கனும்னு நினைப்பாரு. அதான் பிரச்சினை. 18 சீன் எடுத்தோம். படத்துல குறைஞ்சது 12, 13 சீன் வந்துடுச்சு. 4 சீன் போனதுக்கு கோவம். என்கிட்ட சொல்லாமாட்டாரு. என் அசிஸ்டன்ட்கிட்ட சொல்லுவாரு. டைரக்டர் தூக்கிட்டாரு, தூக்கிட்டாருனு சொல்லிட்டே இருப்பாரு.

படம் பாத்துட்டு பயங்கர ஹாப்பி. சண்டைக்கோழி பாத்துட்டு ரொம்ப பிடிக்கும் அவருக்கு. 4 சீன் தூக்கிட்டேனு சண்டை பாேட்டதால கூப்பிட மாட்டேங்குறீங்களா?னு கேப்பாரு. இல்ல சார், பொருந்தல எனக்கு சரியா அமையலனு சொல்லுவேன். அஞ்சான் டைம்ல கூட பேசுனேன். அப்போ அவரு வரல. சூரிதான் பண்ணாரு. பொதுவா சொல்லனும்னா ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒருத்தங்க வருவாங்க. அந்த காலத்தை ஆண்டுட்டு போவாங்க. அது விவேக் காலம்.

இவ்வாறு அவர் பேசினார்.

லிங்குசாமி இயக்கத்தில் ரன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். மாதவன் - மீரா ஜாஸ்மின் நாயகன், நாயகியாக நடித்திருந்தாலும் இந்த படத்தின் வெற்றிக்கு விவேக்கும் மிகவும் முக்கியமான காரணம் ஆவார். இந்த படத்தில் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பிரபலம் ஆகும். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.