Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
சுகுமாறன் July 14, 2026 12:44 AM

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. இந்த படம் குறித்து நடிகரும், படத்தின் இயக்குனருமான மிஷ்கின் கூறியதாவது,

இழப்பு:

நான் முதன்முதலில் தாணுவை சந்தித்தது நந்தலாலா படத்திற்காகவே. நந்தலாலா கதை சொல்லவும் அவருக்கு ஒன்னுமே புரியல. எவ்ளோ பட்ஜெட் என்று கேட்டார்? 3.50 ரூபாய் அல்லது 4 ரூபாய் பட்ஜெட் எடுக்கலாம் என்றார். சித்திரம் பேசுதடி பார்த்துவிட்டு 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கலாம் என்றார். இதில் அவ்வளவு விஷயங்கள் எல்லாம் இல்லை சார்.

கிளைமேக்ஸில் ஹெலிகாப்டர் எல்லாம் வரக்கூடாது சார். ரொம்ப சாதாரண கதைசார் இது. விக்ரமிற்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது அந்த கதை. அப்போ ஒரு அட்வான்ஸ் கொடுத்தாரு தாணு சார். இந்த படம் நான் பண்ணலப்பா. ரொம்ப சின்ன படமாக இருக்குது என்றார். கண்டிப்பாக எனக்கு அது இழப்புதான்.

மிகப்பெரிய நடிகர்:

மிகச்சிறந்த நடிகர் விக்ரமோட பண்ணவேண்டியது அப்படியே போயிடுச்சு. இத்தனை வருஷம் கழிச்சு கதை வச்சுருக்கேனு சொன்னேன். விஜய் சேதுபதி பண்ணலாம்னு சொன்னாரு. விஜய் சேதுபதி என்கூட 2 நாள் ஒர்க் பண்ணுச்சு அந்த குழந்தை. இரண்டு பேருக்கும் சண்டை இல்ல. ஒரு ஆடிஷன்ல அவருக்கு போதுமான இடம் தரல. அப்றம் தம்பி மிகப்பெரிய நடிகராக  மாறிட்டாரு.

அப்புறம் சைகோபாத்னு என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துச்சு. அவரை ஒரு சிறந்த மனிதனா பாத்தேன். நான் அவரோட வேலை பாக்குறேனு அந்த கதை எழுதுனேன். நான் அந்த படம் எழுதுவதற்கு முன்பு விஜய் சேதுபதி போட்டோ ஒட்டி எழுதுனேன். வாழ்க்கையோட அர்த்தம் முடிஞ்சுபோச்சுனு நினைச்சுகிட்டு இருக்குற கதாபாத்திரம், என்னதான் ஒரு ரைட்டர் எழுதுனாலும், தயாரிப்பாளர் காசு கொடுத்தாலும் அதை கொண்டு வர கதாபாத்திரம்தான் நடிகர். 

செருப்பால் அடிக்கலாம்:

இந்த படத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் பண்ணிருக்க முடியாது. இதை கமல்சார் பண்ணியிருக்க முடியாதா? கமல் சார் பண்ணியிருக்க முடியாது. அமீர்கான் பண்ண முடியாதானா பண்ண முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை. இந்த படம் நல்லா இருக்குனு சொல்ல வர்றல. நான் ஒரு கலைஞன் பற்றி சொல்கிறேன்.

படம் பாத்துட்டு நல்லா இல்லைனு சொன்ன என்னை செருப்பை கழட்டி அடிங்க. நான் எப்போதும் என் படத்தைப் பத்தி பேசமாட்டேன். மிகச்சிறந்த நடிப்பை விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.