கதையில் பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை போட்ட பக்கா பிளான்… கதாசிரியர் போட்ட குண்டு!
Tamil Minutes July 14, 2026 03:48 AM

அகிலன் நாவலாக எழுதி அதற்குப் பின்னால திரைப்படமாக உருவானதுதான் பாவை விளக்கு. அந்தக் கதையை அகிலன் தொடராகவே எழுதிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் அதை விரும்பி படித்துக் கொண்டு இருந்தவர் நடிகை எம்என்.ராஜம். அந்தக் கதையில் 4 கதாநாயகிகள். அந்த 4 கதாபாத்திரங்களில் எம்என்.ராஜத்துக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்னா அது உமா எனற கதாபாத்திரம். அந்தக் கதையை யாராவது திரைப்படமாக எடுத்தால் எப்படியாவது அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பது எம்என்.ராஜத்தின் ஆசையாக இருந்தது.

விஜயகோபால் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் கே.சோமுவின் இயக்கத்தில் அந்தக் கதையைப் படமாக்குவது என்று முடிவு செய்தது. அப்போது உமா கதாபாத்திரத்துக்கு அவங்க தேர்ந்தெடுத்து இருந்த நடிகை எம்என்.ராஜம். அந்தச் செய்தியைக் கேட்ட உடனே அப்படியே ஆனந்தத்தில் மூழ்கிப் போனார் எம்என்.ராஜம். அப்படி அவர் அளவில்லாத ஆனந்தத்தில் இருந்தபோது பாவை விளக்கு கதை எழுதிய நாவலாசிரியரான அகிலன் எம்என்.ராஜனுடைய அந்த ஆனந்தத்தில் மிகப்பெரிய குண்டைப் போட்டார்.

இந்தக் கதாபாத்திரத்தைப் பொருத்தவரைக்கும் இதுல சரோஜாதேவி நடிச்சா நல்லாருக்கும் என்பது அகிலனுடைய எண்ணமாக இருந்தது. இதைக் கேட்ட உடனே துடித்துப் போய்விட்டார் எம்என்.ராஜம்னு தான் சொல்லணும்.

உடனடியா அகிலனை சந்தித்த எம்என்.ராஜம், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கணும்கறது என்னோட நீண்ட நாள் கனவு. எனக்கு அந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தீங்கன்னா நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் முடிந்தளவுக்கு மிகச்சிறப்பாக நடித்து உங்களுக்குப் பெயர் வாங்கித் தருவேன் என்று சொன்னார்.

அவரது வேண்டுகோளை ஏற்று அந்தக் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கட்டும்னு சொன்னார் அகிலன். அதைத் தொடர்ந்து தான் அந்த உமா கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு எம்என்.ராஜத்துக்கு அமைந்தது. படத்தைப் பார்த்தவங்களுக்கு அந்தக் கதையிலே உமாவின் கதாபாத்திரம் எந்தளவுக்கு முக்கியமானது என்பதும், அதற்கு எம்என்.ராஜம் எந்தளவுக்கு நியாயம் செய்து இருந்தார் என்பதும் நன்றாகத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Sankar Velu

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

Author: Sankar Velu

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.