இந்தியா -இங்கிலாந்து நான்காவது மற்றும் ஐந்தாவது டி-20 ஆட்டங்கள்
இந்திய அணி தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தது
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நான்காவது டி-20 ஆட்டம் ஜூலை 9ஆம் தேதி அன்று பிரிஸ்டாலில் நடந்தது. பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா (16 ரன்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (15 ரன்) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இஷான் கிஷனும் (4 ரன்) சொறப் ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன் எடுத்தார். ஆனால் பிற வீரர்களான ஷிவம் துபே (22 ரன்), திலக் வர்மா (11 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (5 ரன்), அக்சர் படேல் (1 ரன்) ஆகியோர் சரியாக ஆடததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 158 ரன் மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (42 பந்துகளில் 59 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (35 பந்துகளில் 79 ரன்) அடித்ததால் இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐந்தாவது டி-20 ஆட்டம் சௌதாம்படனில் ஜூலை 11 அன்று நடந்தது.
இந்த ஆட்டத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் பூவாதலையா வென்றார். இங்கிலாந்தை மட்டையாடச் சொன்னார். அந்த அணியின் ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 131 ரன், 12 ஃபோர், 8 சிக்சர் மாற்றும் ஹாரி ப்ரூக் 45 பந்துகளில் 95 ரன், 4 ஃபோர், 8 சிக்சர் அடித்ததால் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 257 ரன் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது.
இரண்டாவதாக ஆடிய இந்திய அணியில் இந்த முறை வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 27 ரன் அடித்தார். ஆனால் அபிஷேக் ஷர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 56 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன், திலக் வர்மா 53 ரன் அடித்தனர்.
ஆனால் அதற்குப் பின்னல் வந்த ஷிவம் துபே (14 ரன்), சுயான்ஷ் ஷெட்கே (7 ரன்), அக்சர் படேல் (3 ரன்), அர்ஷதீப் சிங் (4 ரன்), பிரசித் கிருஷ்ணா (1 ரன்) சரியாக ஆடாததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் அடித்து தோல்வியைச் சந்தித்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.
IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி! News First Appeared in Dhinasari Tamil