“கொள்ளை அடிச்சது போதும்!..சொத்து கணக்க காட்டுங்க!”… திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த சவால்..!!!!
SeithiSolai Tamil July 13, 2026 12:48 AM

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும், பதவியேற்பதற்கு முன்பிருந்த தங்களது சொத்து மதிப்பு மற்றும் தற்போதைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை ஓரக் கடைகளில் கூட திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு ஊழல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் விஜய் என்றும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் தவெக-வின் ஆட்சி மலரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், தவெக நிர்வாகிகள் கடந்த 20 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காகச் சேவை செய்து வருவதாகவும், லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவதே தங்களின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக கவுன்சிலர்களின் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ள அமைச்சரின் இந்த கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.