Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
பேச்சி ஆவுடையப்பன் July 13, 2026 08:44 AM

ஜூலை 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று ஆனி மாதம் 29ம் நாளாகும். இன்றைய நாளில் 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று நாம் பார்க்கலாம். 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேஷம் 

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் 

குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வித்தியமான பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிடைக்கும். பேச்சுகளில் கனிவு வேண்டும். புதிய நபர்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

மிதுனம்

எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள். மனதளவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும்.

கடகம் 

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும்.

சிம்மம் 

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும்.

கன்னி 

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். அனுபவ பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும்.

துலாம்

சகோதரர்களின் வகையில் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் 

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பங்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

தனுசு 

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சிந்தித்து செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

மகரம் 

பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும்.

கும்பம் 

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்கால தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும்.

மீனம் 

கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகன தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.