“அரசாங்கம் போட்ட GO எங்கே போனது?” போதையை ஒழிக்க வந்த 'டிரக் அம்பாசிடர்' என்னாச்சு….? அண்ணாமலை டீம் நடத்திய அதிரடி ஆபரேஷன்….!!
SeithiSolai Tamil July 13, 2026 09:48 AM

கடந்த 2025ஆம் ஆண்டு, தமிழகக் கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும், மாணவர்களைக் காக்கவும் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 முதல் 20 மாணவர்களைக் கொண்டு ‘டிரக் அம்பாசிடர்’ (Drug Ambassador) என்ற பொறுப்பை உருவாக்க அப்போதைய அரசு அரசாணை (GO) ஒன்றை வெளியிட்டது. ஆனால், இந்தத் திட்டம் பேப்பரோடு நின்றுவிட்டதே தவிர, கல்லூரிகளில் நடைமுறைக்கு வரவில்லை என்பதையும், இதுபற்றி யாருக்கும் தெரியவில்லை என்பதையும் பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

​அரசு கைவிட்ட இந்த நல்ல திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பினர் தற்போது ரகசிய ஆபரேஷனில் இறங்கியுள்ளனர். இந்த அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கு நேரில் சென்று, கல்லூரி முதல்வர்களிடம் அந்த அரசாணையைக் காண்பித்து, கல்லூரிகளுக்குள் ‘டிரக் அம்பாசிடர்’ குழுக்களை உருவாக்கப் போராடி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக, இந்த பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி டிரக் அம்பாசிடர்கள் பங்கேற்றுள்ள நிலையில், அரசாங்கம் கைவிட்ட திட்டங்களை ஆழமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்களது நோக்கம் என்று அண்ணாமலை டீம் அதிரடி காட்டியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.