தங்கத்தின் மீதான ஈர்ப்பு உலகில் உள்ள பல நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமணங்கள், பிறந்தநாள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவு தங்கத்தை வாங்குவார்கள். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு வாங்கி வருகிறார்கள். மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது. மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசர தேவைக்கு தங்கத்தை உடனடியாக விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும் என்பதால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி வருகிறார்கள்.
தங்கத்தின் விலையானது குறைய பல காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீதி தங்களது பார்வையை திருப்பியுள்ளதால் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் அளவு குறைந்துள்ளது. வரும் நாட்களில் போரின் அடுத்தக்கட்ட பயணத்தை தொடர்தே தங்கம் விலை ஏறுமா இறங்குமா.? என தெரியவரும்.
தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.