ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
ராகேஷ் தாரா July 14, 2026 04:14 PM

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநராக தனது முதல் படைப்பை நிறைவு செய்துள்ள ஜேசன் சஞ்சய், அடுத்ததாக நடிகராகவும் களமிறங்க உள்ளதாக கூறப்படுவதால், இந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்

சிக்மா ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் விஜயைத் தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவிற்கு வருவார் என்பது ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்த்த நிகழ்வே. ஆனால் பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது பயணத்தை தொடங்க முடிவு செய்தார்.  லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருப்பதால் சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

நாயகனாக அறிமுகம் 

சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் ஜேசன் சஞ்சய் நடித்திருந்தார். அவரைப் பார்த்த பலர் ஜேசன் சஞ்சய் அப்படியே தனது அப்பாவைப் போல இருப்பதாக கூறினர்.

வெளிநாட்டில் திரைப்பட இயக்கம் தொடர்பாக கல்வி பயின்ற ஜேசன் சஞ்சய், நீண்ட காலமாக திரைப்படத் துறையில் இயக்குநராக அறிமுகமாகும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக 'சிக்மா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க தயாராகி வருவதாகவும், அதற்காக பல்வேறு கதைகளை கேட்டு வருவதாகவும் திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. ஜி கே தமிழ்குமரன் தயாரிப்பில் பிரபல இயக்குநர் படத்தில் ஜேசன் சஞ்சய் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேசன் சஞ்சய் ஏற்கனவே குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஜேசன் சஞ்சய்க்கு ரசிர்களிடையே மிகப்பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் அவர் நாயகனாக நடிக்கும் படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.