மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
கு. அஜ்மல்கான் July 14, 2026 04:44 PM

பழநி கோயில் நிலம்- பத்திர பதிவு சர்ச்சை

தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பார்க்கப்படுபவர் ரமேஷ், அறநிலையத்துறையில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள், ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். இந்த நிலையில் பழநியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக அமைச்சர் ரமேஷின் உறவினர் பத்திர பதிவு செய்ததாக சமூகவலைதளத்தில் செய்தி பகிரப்பட்டது.

இதனையடுத்து பொய்யான தகவல் தன் மீது பகிரப்படுவதாகவும்,  அமைச்சருக்கு தெரிந்தே தான் இந்த குற்றம் நடந்தது என்றும் தனக்கு எள்ளளவும் சம்மந்தம் இல்லாத விடயத்தில் அமைச்சர் பெயரை பொய்யாக வன்மத்துடன் இணைத்து பரப்பும் நபர்கள் மீதும், சமூக வலைதள கணக்குகள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் அமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ரூ. 100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு பத்திர பதிவு

இந்த நிலையில் இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள்,  ஆமா,  100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க

ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்சஅடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்டமிட்ட பகல் கொள்ளை.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்க

முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே 100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க என திமுக ஐடி விங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.