விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
கு. அஜ்மல்கான் July 14, 2026 06:44 PM

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதீ திட்டம் தீட்டிய விவகாரத்தில் நீதிமன்றம் முன்  ஜாமின் வழங்கிய செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், வழக்கு பதிவில் தமது பெயர் மற்றும் தனது சகோதரர் அசோக் குமார் பெயர் இடம்பெறவில்லை. எனவே வழக்கு பதிவில் பெயர் இல்லாத போது இந்த வழக்கில் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். தனக்கு 35 clause(3)  BNS என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள செந்தில் பாலாஜி, தான் இந்த வழக்கின் கீழ் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார். 

தான் ஒரு மக்கள் பிரதிநிதி அதுமட்டுமல்ல தான் ஒரு பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் எங்கும் ஓடி ஒளியவில்லையெனவும், தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட அல்லது விசாரணைக்கு ஆஜராகும்பட்சத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மருத்துவ வசதி வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அமைச்சர்கள் மிரட்டும் தோனியில் பொது இடங்களில் பேசி வருகின்றனர். தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என தன்னை காரணம் காட்டி வருவதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களை கைது செய்து வருவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,  செந்தில் பாலாஜியை கைது செய்ய மாட்டோம் என கூறி திருவல்லிக்கேணி போலீசார் 35 clause(3)  BNS நோட்டீஸ் கொடுக்கலாமா.?  அல்லது நீதிமன்ற நிபந்தனை மதிக்காமல் இருப்பதால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரின் முன் ஜாமினை ரத்து செய்ய நீதி மன்றத்தை நாடலாமா என திருவல்லிக்கேணி போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.