வியட்நாம் படகு விபத்து : இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி..!
Top Tamil News July 14, 2026 06:48 PM

தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, சிறந்த வணிகச் செயல்பாட்டிற்காக லாவா நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. அப்போது, கடந்த 11ஆம் தேதி, அங்குள்ள சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே அதிவேகப் படகு ஒன்றில் இந்தப் பயணிகள் சவாரி செய்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில், அந்த அதிவேகப் படகு கவிழ்ந்து, 36 பயணியரில் 15 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 10 பேர், கேரளத்தவர் 2 பேர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மூவர்.

மீட்புப் பணிகளுக்குப் பின்னர் 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தடைந்தன. அங்கிருந்து சென்னை, கோவைக்கு அவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆவணங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.