இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும், மக்கள ஏமாத்துரதுக்கு ,பொய் சொல்லி பிழைக்க நேர்மையான வழியில் நடக்கும் தூய்மையான ஆட்சி தவெக ஆட்சி - கார்த்திகேயன்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் விஜய் போன்று வேடமிட்ட நபர் வந்தபோது அங்கிருந்த சிறுவர் சிறுமியர்கள், பெண்கள் தவெக நிர்வாகிகள். செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனும் கைகொடுத்து வரவேற்றார். இதனையடுத்து விஜய் வேடமிட்டவர் பொதுமக்களை பார்த்து விஜய் போல சைகையை செய்தார். இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் இணைந்து கச்சேரி பாடலுக்கு ஏற்ப நடனமாடி உற்சாகபடுத்தினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை எம்எல்ஏ கார்த்திகேயன் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி விஜய் போன்று வேடமிட்டுவந்த நபரை பார்த்து மாண்புமிகு குட்டி CM அவர்களே வருக என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய எம்எல்ஏ கார்த்திகேயன் :- வண்டியூர் பகுதி கழக சகோதரிகள் ஜனநாயகன் படத்திற்கு வந்தார்கள் அய்யோ என்ன ஆட்டம் தளபதி ஆடுறத பாக்குறதா இவங்க ஆடுறது பாக்குறதா? அவ்வளவு பாசம் தளபதி மேல தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை முதற்கொண்டு தமிழக முதலமைச்சராக விஜய் தான் ஆக வேண்டும் என எண்ணம் உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் எதிர்கட்சியே இல் 13 வயசு சிறுவர்கள் அடுத்த தேர்தலும், 8வயது சிறுவர்கள் 2036லும் விஜய்க்கு வாக்களிப்பார்கள். அதனால் விஜய் MGR போல வாழும்வரை முதலமைச்சராகவே இருப்பார்., 5 முதல் 50 வயதுவரை அனைவரின் நெஞ்சிலும் விஜய் குடியிருக்கிறார். ரெடியா இருக்கு மதுரை மத்திய சிறைச்சாலை தொடங்கி அனைத்து கதவுகளும் திறந்துகிடக்கின்றது கடந்த ஆட்சியில் ஊழல்செய்த அத்தனை அரசியல்வாதிகளும் சிறைசெல்வது உறுதி உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும் இது விஜய் ஆட்சி
இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும்,
இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும், மக்கள ஏமாத்துரதுக்கு ,பொய் சொல்லி பிழைக்க நேர்மையான வழியில் நடக்கும் தூய்மையான ஆட்சி
தவெக ஆட்சி, கொளத்தூர் தொகுதியில் கொத்து புரோட்டா போட்டாங்களு இந்த விஜய் போல இருப்பவர் தான் போயிருக்காரு, 20 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்திருக்கிறார், தளபதி 5 நிமிசம்தான் போனாரு, இவரு தினமும் போனாரு 5 நிமிசம் போனதுக்கே கொத்துபுரோட்டா போட்டாங்க 5 நாட்கள் பிரச்சாரம் பண்ணிருந்தா என்னவாகிருக்கும்,
விஜய் போன்று இருக்கும் இவர் நிற்கிறே இதே மேடையில் தமிழக முதலமைச்சர் விஜயை நிப்பாட்டிகாட்டுவேன் வண்டியூர் பகுதிக்கு அழைத்துவருவேன். தலைவரால முடியல ஒரு இடத்துக்கு வந்துட்டுபோறது அவ்வளவு சாதாரண விசயம் கிடையாது. தமிழக முதலமைச்சராக அவ்வளவு பாதுகாப்பு நிறைந்திருந்தாலும் தமிழகத்தில் அனைத்து இடத்திற்கு போக வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், ஆர்வம் இருந்தாலும் அவர் கண்டிப்பாக மதுரைக்கு கிழக்கு தொகுதிக்கு வண்டியூருக்கு வருவார்" என்றார்.