திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
கு. அஜ்மல்கான் July 27, 2026 01:44 PM

திமுகவை குறிவைக்கும் தவெக

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் தவெக என்ற கட்சியை தொடங்கிய விஜய், அடுத்த 2 வருடங்களில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழக நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில் கடந்த ஆட்சியில் வாங்கிய கடன், தேவையில்லாத செலவு என பட்டியலிட்டார்.மேலும் தற்போது தமிழக அரசின் நிதி நிலைமையையும் வெளியிட்டிருந்தார். 

திமுக மாஜிக்களுக்கு குறி

அடுத்ததாக கடந்த திமுக ஆட்சியில் மின் துறையில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் முறைகேடு, டெண்டர் ஆகியவை தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், திமுக மாஜிக்களை குறிவைத்து தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, சிவசங்கர், தாமோ அன்பரசன் என அடுத்தடுத்து மாஜிக்களை நெருங்கி வருகிறது. மேலும் வரும் நாட்களில் திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான நிலையில், தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை தொகை 2500 ரூபாயாக உயர்வு, வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 4,000 உதவித்தொகை, தாய் மாமன் சீர் என பல அறிவிப்புகள் வெளியாகுமா.? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான பட்டியலை தவெக அரசு தயார் செய்து வருகிறது.

திமுக ஆட்சி முறைகேடு

எந்த எந்த துறையில் எவ்வளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. தொடங்ப்படாத திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, டெண்டர் முறைகேடு என ஒட்டுமொத்தமாக பட்டியலை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முறைகேடு தொடர்பான தனி அறிக்கையை பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார்.

இது தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், சட்டமன்ற கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் மனசாட்சியே இல்லாதது போல திமுவினர் செயல்பட்டனர். பார்ட்டி பண்ட் என்றால் என்னவென்றே தெரியாதது போல செயல்பட்டனர்.

பட்ஜெட்டில் ஊழல் அறிக்கை வெளியீடு

எனவே வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் என்ன நடக்கபோகிறதை என்பதை நீங்கள் பார்க்கப்போறீங்க, தனியாக ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆடிட்டிங் நடைபெற்று வருகிறது. ஊழல் பட்டியல் தாக்கல் செய்யப்போகிறோம். அப்போது திமுகவினரைப்பற்றி தெரியும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். எனவே திமுக மாஜிக்களை தவெக அரசு நெருக்கி வருவதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.